--> Skip to main content

துரித உணவுகளை சாப்பிட்டால் புற்று நோய் உண்டாகும்!



உணவே மருந்து… மருந்தே உணவு… என்ற பழமொழிக்கேற்ப சிறந்த உணவே நமக்கு மருந்தாக அமையும்

அதே நேரத்தில், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எந்த உணவையும் அளவோடு எடுத்து கொண்டால் நல்லது. அளவை மீறும் போது அது நமக்கே பல ஆபத்துக்களை விளைவிப்பதுண்டு.

இந்த அவசர நாகரீக உலகத்தில் அனைவரும் அவசரத்தை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.

அவசரம், அவசரம், எதிலும் அவசரம் எங்கும் அவசரம். உணவிலும் கூட அவசரத்தை விரும்புகிறோம். அதாவது துரித உணவு (பாஸ்ட் புட்) என்று சொல்லக் கூடிய அதிக காரம், அதிக உப்பு, மீண்டும் மீண்டும் சமைத்த எண்ணெயில் செய்த உணவு போன்றவை குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். சில சமயங்களில் புற்று நோய்யைக்கூட ஏற்படலாம்.

மேலும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம், அஜினமோட்டோ போன்ற பொருட்களை அளவிற்கதிகமாக சேர்த்தால் நமது குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். இது யாருக்கும் தெரியாத உண்மை.

இதை நாம் நம் குழந்தைகளுக்கும் வாங்கி உண்ண கொடுத்து அவர்களுடைய உடல் நலனையும் கெடுக்கிறோம். பொதுவாக அதிகமான காரம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். சிறந்த உணவு பழக்கவழக்கத்தை கையாண்டால் உடலில் புண்களாகிய, வாய் புண்கள் குடற் புண்கள் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.

உடலில் புண்கள் வந்த பிறகு உணவுக்கட்டுப்பாடு நேரத்திற்கு உணவு அருந்துதல் மற்றும் மருந்து ஆகியவற்றை கடைபிடித்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

மேலும் உடலில் புண்களை உருவாக்குகிற ஹெச் பைலரி கிருமிகளை பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து அதற்கேற்றார்போல் மருந்து எடுத்து கொண்டால் குணப்படுத்தலாம். சில சமயங்களில் புளித்த ஏப்பம் போல் எதுக்களித்து வரும்.

அதாவது உணவுக்குழாய்க்கும் வயிற்றிற்குமிடையில் உள்ள பகுதியில் பிரச்னை ஏற்பட்டு வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாய்க்கு மேலே எதுக்களித்து வரும் போது புளித்த ஏப்பம் வரும். சிலருக்கு காலை நேரத்தில் வாந்தி வருவதுண்டு. அதை பித்த வாந்தி என்று கூறுவர். ஆனால் பித்த வாந்தி என்று ஒன்று கிடையாது. பித்த நீரானது கல்லீரலில் சுரந்து பித்தநாளத்தின் வழியாக டியோடினம் என்றும் சிறுகுடலை சென்றடைந்து உணவைச் செரிப்பதற்கு கீழே வந்து விடுகிறது. எனவே பித்த நீரானது மேலே வராது.

வயிறு ஒன்று குப்பை தொட்டியல்ல கண்டதையும் போடுவதற்கு வயிறு ஒன்றும் சுடுகாடல்ல செத்தவற்றை புதைப்பதற்கு எனவே உயிரே உன்னை ஆராதிக்கிறேன் என்று நமது வயிரையும், உடம்பையும் பாதுகாப்பது நமது கையில் தான் உள்ளது.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar