--> Skip to main content

சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...


சிலிண்டர் வாங்கும் போது, முதலில் காலாவதி தேதியை கவனியுங்கள். காலாவதியாகும் நாட்கள் குறித்த குறிப்புகள் சிலிண்டர் கைப்பிடியின் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும்.

ஆங்கில எழுத்துக்களில் ஏ, பி, சி மற்றும் டி என அகர வரிசையில் குறித்து அதோடு 2 இலக்க எண் இருக்கும்.

இந்த ஆங்கில எழுத்துகள் மாதத்தை குறிக்கக் கூடியவை.

உதாரணமாக,

ஏ என்றால் ஜனவரி முதல் மார்ச் வரை (முதல் காலாண்டு) என்று அர்த்தம்.

பி என குறிக்கப்பட்டு இருந்தால் ஏப்ரல் முதல் ஜூன்

வரையிலும்,

சி என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும்,

டி என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் குறிக்கும்.

சிலிண்டரில் பி13 என குறிக்கபட்டு இருந்தால் ஜூன் மாதம்

2013 வரை பயன்படுத்தலாம் என்பதாகும்.

அடுத்ததாக,

ரெகுலேட்டர் பொருத்தும் 0 வடிவ ரப்பரை சரிபார்க்க வேண்டும். ரப்பரில் சேதாரம் உள்ளதா? புதியதாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும்.

இதில் கோளாறு இருந்தால், காஸ் லீக் ஆகும். அதனால், புது சிலிண்டர் வந்தவுடன் அதை சப்ளை செய்பவரிடமே கூறி ரெகுலேட்டர் பொருத்தி சோதித்து பார்த்து வாங்குவது நல்லது.

காஸ் கசிவு இருந்தால், சப்ளை செய்பவரே ரப்பரை மாற்றி கொடுத்து விடுவார்.

சிலிண்டர் டியூபையும் அடிக்க பரிசோதிக்க வேண்டும்.

அதிகபட்சம் 6 மாதத்துக்கு மேல் ஒரே டியூபை

பயன்படுத்தாதீர்.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar