--> Skip to main content

நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் ?



சில ஆண்டுகள் முன்பு வரை நெற்றிக்கு பொட்டுவைப்பது சிலருக்கு அநாகரிகமாகப் பட்டது. ஆங்கிலேயர்கள் நம்மவர்கள் திருநீறு, திருமண் இட்டுக் கொள்வதை Caste Mark (ஜாதி அடையாளம்) என்று கேட்ட பெயர் தந்து தூக்கில் போடப் பார்த்தார்கள்.

வாஸ்தவத்திலோ விபூதி பூசுகிறவர்களில் பிராமணரிலிருந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியினரும் உள்ளனர். இப்படியே திருமண் இட்டுக் கொள்கிறவர்களிலும் எல்லா ஜாதியாரும் இருக்கிறார்கள். ஆகவே நாம் நெற்றிக்கு பொட்டு இட்டுக் கொள்வது "Caste Mark " அல்ல; மாறாக "Religious Mark " (சமயச் சின்னம்) ஆகும்.

ப்ரும்ம வைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஸ்நானம் தானம் தபோ ஹோமோ
தேவதா பித்ருகர்ம ச |
தத்ஸர்வம் நிஷ்பலம் யாதி
லலாடே திலகம் வினா ||

நெற்றியில் திலகம் இடாமல் செய்யப்படும் தியானம், தானம், தவம், ஹோமம், தேவ பித்ரு கார்யங்கள் யாவும் பயனற்றவையாகும்.

விபூதி அணிவது, திருமண் அணிவது, சந்தன பொட்டு, குங்கும பொட்டு அணிவது முதலிய பழக்கங்கள் ஹிந்துக்களின் ஒரு முக்கியமான பாரம்பரிய அம்சமாகும்.

"நீறில்லா நெற்றி பாழ்" என்பது பழமொழி.
நெற்றியில் புருவ மத்தியில் மூளையின் முன்புறத்தில் பைனீயல் க்ளான்ட் என்று ஒரு சுரப்பி உள்ளது. யோகிகள் இதனை மூன்றாவது கண், ஞானக் கண், ஆக்ஞா சக்ர ஸ்தானம் எனக்குறிப்பிடுவர்.

ஆன்ம ஞானத்திற்கு ஞானக்கண் திறக்க வேண்டும்.இதை ஞாபகப்படுத்தவே பல்வேறு வகையான பொருட்களை நெற்றியில் திலகமாக அணிவர்.நம் உடல் முழுவதும் மின்காந்த அலைகளாக சக்தியை வெளிபடுத்துகிறது. நெற்றியும், புருவங்களில் மத்தியில் உள்ள நுண்ணிய பகுதியும் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இதனாலேயே மனதை எதாவது ஒரு விஷயம் வெகுவாக பாதிக்கும் போது தலை உஷ்ணமடைந்து தலைவலி ஏற்படுகிறது. நெற்றியில் அணியும் திலகம் நெற்றியைக் குளிர வைத்து உடல் உபாதையினின்று நம்மைக் காக்கிறது. மேலும் உடலின் சக்தி வீணாகாமல் தடுகிறது.

விஞ்ஞானப்படி சந்தனம் குளுமையை அளிப்பது, விபூதி சர்மத்தை சுத்தி செய்வது, குங்குமம், மஞ்சள் ரத்தத்தை சுத்தப்படுத்துவது.ஆகவே இப்பொருட்கள் நெற்றியில் அணியும் பொருட்களாக தேர்ந்தெடுக்கபடுகின்றன.


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar