--> Skip to main content

உதடு வெடிப்புக்கு,பல் ஈறு நோய்களுக்கு..-(UTHADU VEDIPUKU,PALL YERU NOIGALUKU)


உதடு வெடிப்புக்கு.

உதடுகள் அழகாக சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள். அழகாக இருக்க விருப்பம். ஆனா அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்..

பொதுவாக வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் வந்தால், மிகவும் வலியுடன், முக அழகையே அது கெடுத்துவிடும். இத்தகைய வெடிப்பு வருவதற்கு பருவநிலைமாறுபாடான கோடை, குளிர், காற்று போன்றவை காரணங்களாகும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு அதிகமாக எதையும் தாங்க முடியாது. மேலும் சில வெடிப்புகள் சில மருந்துகளினாலும், கெமிக்கல் கலந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துவதினால், உடலில் நீர் வறட்சி இருந்தால், சோப்புகளை பயன்படுததுவதினாலும் ஏற்படுகின்றன. அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், அதிகமாக சிவப்பு நிறத்துடன் காணப்படுவது, தொட்டால் வலிப்பது என்று இருக்கும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் உதட்டை சரியாக பராமரிக்க இயற்கை முறையில் ஒரு சில ஈஸியான வீட்டு மருந்துகள் இருக்கின்றன. அது என்னவென்று பார்ப்போமா.

* எப்போதும் போதிய தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உதடு நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.

* வெண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவினால், வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் வெடிப்புகள் இருந்தால் அவை சரியாகிவிடும்.

* ரோஜாவின் இதழ்களை பச்சை பாலில் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை பேஸ்ட் செய்து, உதட்டில் தடவி வந்தால், உதடு நன்கு பிங்க் நிறத்தில் இருப்பதோடு, வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.

* உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்க, தினமும் இரவில் படுக்கும் முன்பு, மில்க் க்ரீமை உதட்டில் தடவ வேண்டும்.

* உதட்டில் வறட்சியை நீக்க வெள்ளரிக்காயை வைத்து, தினமும் உதட்டிற்கு மசாஜ் செய்தால், வறட்சி நீங்கிவிடும்.

* வேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்து, அதனை உதட்டில் தடவினால், உதட்டில் இருக்கும் வெடிப்புகள் போய்விடும்.

* ஆமணக்கெண்ணெயை உதட்டில் தடவி வந்தால், வறட்சி நீங்கி, உதடு பொலிவோடு காணப்படும்.

* கற்றாழையின் ஜெல்லை உதட்டில் தடவினால், உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது குணமாகும்.

ஆகவே, மேற்கூறியவாறெல்லாம் உதட்டை பராமரித்து வந்தால், உதட்டில் வெடிப்புகள் ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.

அருமருந்தான அருகம் புல்..

இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்...

பல் ஈறு நோய்களுக்கு:

எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

உதடு வெடிப்புக்கு...

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

கட்டி கரைய....

கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar