அரிசி மற்றும் ஓட்ஸ் தானியங்கள் தான் அலர்ஜி ஏற்படும் இடர்பாடு குறைவாக உள்ள தானியங்களாகும். அதனால் பல குழந்தைகளுக்கு இதிலிருந்து தான் ஆரம்பிக்கப்படுகிறது. ஒரு வேளை தானியங்கள் வேண்டாம் என்றால் அவகேடோ அல்லது வாழைப்பழத்தில் இருந்து தொடங்குங்கள்.
பழங்கள்:
8 மாதங்கள் முடிவடைந்தவுடன் பழங்களை அப்படியே கொடுக்கலாம். ஒரு வேளை, மென்மையான பழங்களாக இருந்து, குழந்தைக்கு செரிமான பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருந்தால் 8 மாதத்திற்கு முன்பே கூட இதனை கொடுக்கலாம். வாழைப்பழம் அல்லது அவகேடோ என்றால் எப்போதுமே வேக வைக்க வேண்டாம். குழந்தைக்கு 12 மாதங்கள் முடிந்த பிறகு அல்லது மெல்ல தொடங்கும் போது, காய்கறிகளை எப்போதுமே வேக வைத்தே கொடுங்கள். இதனால் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்படாது.
புரதம்:
சரியாக வேகாத உணவுகளை கொடுக்காதீர்கள் - உதாரணத்திற்கு சரியாக வேகாத கோழி, ஆடு அல்லது மீனை குழந்தைக்கு கொடுக்காதீர்கள்.
பால் பொருட்கள்:
குழந்தைக்கு 12 மாதங்கள் முடியும் வரை தாய்ப்பாலுக்கு பதில் வேறு ஏதும் கொடுக்க வேண்டாம். அப்படி செய்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு குறைந்த கொழுப்பு அல்லது ஆடை நீக்கிய பால் பொருட்களை கொடுக்காதீர்கள். முழுமையான பால் தேவையானது.
ஒரு நாளைக்கு:
எவ்வளவு மசித்த உணவு அல்லது தானியங்களை ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் கொடுத்து ஆரம்பியுங்கள். அந்த தானியங்களுடன் 4-5 டீஸ்பூன் தாய்ப்பாலை சேர்த்திடவும். இந்த 1 டீஸ்பூன் மசித்த உணவை அல்லது தாய்ப்பால் கலக்கப்பட்ட 1 டீஸ்பூன் தானியத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை என உயர்த்திடுங்கள். தானியங்கள் கொடுத்தால் நாளடைவில் அது கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.