வாழைத் தண்டு:
கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.
வாழைப்பூ:
கால்ஷியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.
வாழைக்காய்:
இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.
பீட்ரூட்:
இதில் துத்தநாகம், கால்ஷியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.
உருளைக்கிழங்கு:
இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
பாகற்காய்:
இந்த காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.
கேரட்:
இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.
கத்தரிக்காய்:
பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வெண்டைக்காய்:
போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கில் புலி ஆகலாம்.
பீன்ஸ்:
புரதச்சத்து, கால்ஷியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
புடலங்காய்:
வைட்டமின் ஏ, பி, இரும்புச் சத்து, தாமிரம், கால்ஷியம் உள்ளன. எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம்.
அவரைக்காய்:
புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.
முருங்கைக்காய்:
வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.
வெங்காயம்:
இரும்புச்சத்து, கால்ஷியம் உள்ளன. தினமும் சாப்பாட்டில் வெங்காயம் சேர்த்தால், உடல் கொழுப்பை கரைக்க உதவும்.
சுண்டைக்காய்:
புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.
கருணைக் கிழங்கு:
கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும், மூலத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.
தக்காளி:
வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.